அரசூரில் விநாயகர் சிலை தயாரிப்பாளர் சங்க கூட்டம்
களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் நல சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
அரசூரில் தமிழ்நாடு கைவினை காகித கூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் நல சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது, இதற்கு மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பழனிவேல், பொருளாளர் விஷ்ணுராஜ், ஒருங்கிணைப்பாளர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சங்க ஆலோசகர் ரமேஷ் வரவேற்றார், பா.ஜனதா மாநில செயலாளர் அஸ்வத்தாமன், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்க மாநில தலைவர் சேம.நாராயணன், அகில இந்திய குலாலர் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் தியாகராஜன், குலாலர் சாலிவாகன மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ், விழுப்புரம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அருள், மாவட்ட தொழில் வாரிய உதவி இயக்குனர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு அரசு சில கட்டுப்பாடு களை விதித்துள்ளது. இதனால் தொழில் முடங்கி வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்ட சிறுகுறு நடுத்தர தொழிலதிபர்களின் தலைவர் சசிகுமார், மாநில கவுரவத்தலைவர் முருகன், மாநில துணை தலைவர்கள் குமார், ஞானவேல், மாநில துணை செயலாளர் ஜானகிராமன், குமார், செந்தில்குமார், தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில துணைச்செயலாளர் ஆனந்தன் நன்றி கூறினர்.