ஆலவயல் பண்ணைக்களம் வழிவிடும் விநாயகர் கோயில் குடமுழுக்கு
குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டவர்கள்
ஆலவயல் பண்ணைக்களம் வழிவிடும் விநாயகர் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது.
பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயல் பண்ணைக்களம் வழிவிடும் விநாயகர் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது ஊர் முக்கியஸ்தர் பெரி. அழகப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவின் தொடக்கமாக சனிக்கிழமை முதல் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சிவாச்சாரியார்கள் புனித நீரை கும்பத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான மக்கள் பங்கேற்று வழிபட்டனர். ஏற்பாடுகளை ஆலவயல் பூதன்கூட்டம் வகையறாக்கள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் செய்தனர்.
Next Story