குமரியில் மீண்டும் கேங்க் - வார் : வாலிபரை தாக்கிய ஆறு பேர் கும்பல்

குமரியில் மீண்டும் கேங்க் - வார் : வாலிபரை தாக்கிய ஆறு பேர் கும்பல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 30 வருடங்களுக்கு பிறகு கேங் வார் சம்பவங்கள் தற்போது நடந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் 30 வருடங்களுக்கு பிறகு கேங் வார் சம்பவங்கள் தற்போது நடந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதான சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது. நேற்று இரவு சுமார் எட்டு மணியில் இந்த டாஸ்மாக் கடை முன்பு வாலிபர் வருவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கி, சட்டையை கிழித்து அடித்து உதைத்தனர். இதில் அந்த வாலிபர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தை அந்த பகுதியில் உள்ளவர் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வேகமாக பதிவிட்டனர். சம்பவம் அறிந்ததும் கோட்டார் மற்றும் நேசமணி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தாக்குதலுக்குள்ளான வாலிபர் கோணம், வட்டகரை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மதுபான கடையில் பீர் வாங்கிய போது ஏற்பட்ட பிரச்சனையில் தகராறு ஏற்பட்டு வாலிபரை ஆறு பேர் தாக்கியதாக தெரியவந்துள்ளது. சம்மந்தபட்டவர்கள் குறித்த அடையாளம் வீடியோ காட்சி மூலம் தனிப்படை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் ஆறு பேரும் தலைமறைவாகியுள்ளனர். இதில் மூன்று பேர் ஏற்கனவே போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் உள்ளவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த பகுதியில் இந்த கும்பல் மது அருந்திவிட்டு தகராறு அடிக்கடி செய்வது வழக்கம் என்றும் தெரிய வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு நடந்து வந்த கேங் வார் சம்பவங்கள் போன்று தற்போது 30 ஆண்டுகளுக்கு பின் நடந்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது. போலீசார் இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story