குளத்தில் மண் திருடிய கும்பல் - போலிசார் விசாரணை !

குளத்தில் மண் திருடிய கும்பல் - போலிசார் விசாரணை !

திருட்டு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளங்களிலிருந்து திருட்டுத்தனமாக மண்ணெடுத்து வெளியில் அதிக விலைக்கு விற்பனை செய்த கும்பலை போலிசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளங்களிலிருந்து திருட்டுத்தனமாக மண்ணெடுத்து வெளியில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக புகார் உள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறைக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அரசியல் பின்பலம் கொண்டவர்களின் உதவியுடன் இந்த திருட்டு சம்பவங்கள் நடப்பதாக புகார் உள்ளது. இந்த நிலையில் ஆரல்வாய்மொழி அருகே உள்ள சந்தைவிளை பகுதியில் உள்ள குளத்தில் மண் எடுப்பதாக ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து எஸ்ஐ ராஜ ராபர்ட் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். ஆனால் போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்த கும்பல் டெம்போவை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். இதை அடுத்து டெம்போவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டெம்போ உரிமையாளர் யார்? இந்த கடத்தலின் பின்னணியில் இருப்பவர் யார்? என்பதை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story