காங்கேயம் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிப்பு: நோயாளிகள் அவதி

காங்கேயம்  மருத்துவமனையில் மின்சாரம் துண்டிப்பு: நோயாளிகள் அவதி

இருளில் மூழ்கிய மருத்துவமனை

காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் இரவு நேரத்தில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நோயாளிகள் மற்றும் பணியாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களின் அடிப்படை வசதி என்ற வகையிலும் மற்றும் பல லட்சம் மக்கள் பயன்பெறும் வகையிலும் காங்கேயம் அரசு மருத்துவமனையை தமிழக அரசு அமைத்து தந்துள்ளது.

இம்மருத்துவமனை காங்கேயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான வெள்ளகோவில், படியூர், ஊதியூர், நத்தக்காடையூர், சென்னிமலை ரோடு, ஆலம்பாடி, வட்டமலை மற்றும் திட்டுப்பாறை வரையிலான பகுதிகளை உள்ளடக்கியது மற்றும் இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையிலும் அனைத்து விதமான மருத்துவ வசதிகளை கொண்டு செயல்பட்டு வருகிறது.

காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் இம்மருத்துவமனையில் தற்போது அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் நோயாளிகள் பெருமளவில் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் தினசரி அளவில் சுமார் 1000க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து செல்லும் இடமாக இந்த மருத்துவமனை செயல்பட்டு வரும் நிலையில் அவசர உதவிக்கு காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து.

இம்மருத்துவமனையை நம்பியே நோயாளிகள் வந்து மருத்துவத்திற்கு காத்திருக்கும் நிலையில் மின்சார துண்டிப்பு ஏற்படும் பட்சத்தில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. தலைமை அரசு மருத்துவமனை என தரம் உயர்த்தப்பட்ட இந்த காங்கேயம் அரசு மருத்துவமனையில் இது போன்ற பிரச்சினைகள் பெரும் குறையாக உள்ளது.

மேலும் மருத்துவமனையின் அடுத்த கட்டமாக தினசரி நோயாளிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு அரசு கூடுதலாக அதிக படுக்கைகளை அமைக்கும் வகையில் புதிய கட்டிடங்களை கட்டி வருகிறது. எனவே மருத்துவமனையின் தரம் குறையாமல் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் பற்றாக்குறையாக உள்ள மருத்துவர்களை நியமித்து நோயாளிகளின் நலன் காப்பது அரசின் கடமையாகும். எனவே இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும்,

தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது ஒரு புறமிருக்க நேற்று இரவு மருத்துவமனையில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது அப்போது சிலர் சிகிச்சையில் இருந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு செவிலியர் நோயாளிகள் படுக்கும் கட்டிலில் குளுக்கோஸ் பாட்டிலை மாட்டுவதும் அதற்க்கு ஒருவர் தனது செல்போனில் லைட் அடித்து உதவி புரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி காங்கேயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story