கனியாமூர் சக்தி பள்ளி பிளஸ் 2 தேர்வில் அசத்தல்
சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தனர்.
சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தனர். மாணவி ஸ்ரீமதி 589 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம், மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றார். அவர், தமிழ் 99, ஆங்கிலம் 93, பொருளாதாரம் 98, வணிகவியல் 100, கணக்கு பதிவியல் 100, வர்த்தக கணிதம் 99 என 589 மதிப்பெண் பெற்றார்.
மாணவி பூவிதா தமிழ் 98, ஆங்கிலம் 87, பொருளியல் 98, வணிகவியல் 99, கணக்கு பதிவியல் 99, வர்த்தக கணிதம் 96 என 577 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் இரண்டாமிடம், மாணவி வித்யா தமிழ் 94, ஆங்கிலம் 89, பொருளியல் 97, வணிகவியல் 99, கணக்கு பதிவியல் 100, வர்த்தக கணிதம் 95 என 574 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். 550க்கு மேல் 7 பேர், 500க்கு மேல் 14 பேர் மதிப்பெண் பெற்றனர். சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகள் சி.இ.ஓ., முருகனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கான பாராட்டு விழாவில், பள்ளி நிறுவனர் பார்வதியம்மாள், தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ரவிக்குமார், முதல்வர் பிரகாஷ் ஆகியோர் மாணவிகளை பாராட்டி, சால்வை அணிவித்து, இனிப்பு மற்றும் பரிசு வழங்கி கவுரவித்தனர். நிகழ்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.