ரயிலில் கேட்பாரற்று கிடந்த கஞ்சா பண்டல்கள் - போலீசார் விசாரணை
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா
டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 9.250 கிலோ கஞ்சாவை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜார்க்கென்ட் மாநிலம் டாட்டா நகர் பகுதியில் இருந்து எர்ணாகுளம் வரை செல்லும் டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு நோக்கி வந்து கொண்டு இருந்தது.ஈரோடு ரயில் நிலையம் அருகே வந்த போது ஈரோடு ரயில்வே இருப்பு பாதை போலீசார் ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது ரிசர்வ் செய்யப்பட்ட எஸ்.1.பெட்டியின் கழிவறை அருகில் சோதனையில் பை ஒன்று கேட்பாரற்று கிடந்து உள்ளது.போலீசார் அதனை பிரித்து பார்த்த பொழுது அதில் 9.250 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் கஞ்சாவை கைப்பற்றிய ஈரோடு ரயில்வே இருப்பு பாதை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை ஈரோடு மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Next Story