ரயிலில் கஞ்சா கடத்தல் - 2 பேர் கைது, 6 கிலோ பறிமுதல்

ரயிலில் கஞ்சா கடத்தல் -  2 பேர் கைது, 6 கிலோ பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா 

காட்பாடி அருகே ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி மதுவிலக்கு அமலாக்கபபிரிவு இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் தாராபடவேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரை முள்புதர் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குமார்சிங், தாரத்ராஜாத் என்பது தெரிய வந்தது.அவர்கள் வைத்திருந்த பையில் 6 கிலோ கஞ்சா இருப்பதும் தெரிய வந்தது. விசாரணையில் ஜார்க்கண்டில் இருந்து காட்பாடிக்கு ரயிலில் வந்ததாகவும், கஞ்சா விற்பனை செய்ய தருமபுரிக்கு பஸ்சில் செல்ல இருந்தாகவும் கூறினர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story