கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவில் நில ஆக்கிரமிப்பு அகற்றம்

கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவில் நில ஆக்கிரமிப்பு அகற்றம்
ஆக்கிரமிப்பு அகற்றம்
கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவில் நில ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

சேலம் மாவட்டம் கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த நில ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று கோவில் நில ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜா தலைமையில் வருவாய்த்துறையினர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் முன்னிலையில் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. இந்த பணியின் போது, இரும்பாலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story