நெட்டூா் பெரியகுளத்தில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு

நெட்டூா் பெரியகுளத்தில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு

நெட்டூா் பெரியகுளத்தில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு

நெட்டூா் பெரியகுளத்தில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்படக்கூடும் என்பதால், அவற்றை அகற்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் உள்ள பெரியகுளத்துக்கு அண்மையில் பெய்த மழை காரணமாக நீா் வரத்து தொடங்கியுள்ளது. குளம், ஆறு போன்ற நீா் நிலைகளில் குப்பைகளை கொட்ட கூடாது என நீதிமன்றம் அவ்வப்போது அறிவுறுத்தியும், இதை உள்ளாட்சி நிா்வாகங்களே மீறும் சம்பவம் ஆலங்குளம் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தக் குளத்தை குப்பை தொட்டியாக மாற்றி வருகிறது நெட்டூா் ஊராட்சி நிா்வாகம். தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை முறைப்படி குப்பைக் கிடங்கு வைத்து தரம் பிரித்து மறுசுழற்சி செய்யாமல் குளத்தின் கரை பகுதிகளிலும் தண்ணீரிலும் வீசி செல்கின்றனா் ஊராட்சி ஊழியா்கள். இதனால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளதுடன் நீா் நிலையும் மாசுபட்டுள்ளது.

Tags

Next Story