குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு !
குப்பை
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பையால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு தினமும் நேரடியாக சென்று மக்கும்,மக்காத குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.இந்நிலையில் மாநகராட்சி 30-வது வார்டுக்கு உட்பட்ட நாகல்புதூர் 5வது சந்தில் தூய்மை பணியாளர்களால் வாகனங்களில் கொண்டுவரப்படும் குப்பைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகளை பல மணி நேரம் கழித்து லாரிகளில் எடுத்துச் செல்கின்றனர். ஒரு சில நாட்களில் குப்பைகள் அப்புறப்படுத்தாமல் குவியல், குவியலாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் சுகாதார சீர்கேட்டால் சிக்கித் தவிக்கின்றனர்.
Next Story