சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகள் - வாகன ஓட்டிகள் அவதி

சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகள் - வாகன ஓட்டிகள் அவதி

வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகலை வாகன ஓட்டிகள் அவதி என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு நெடுஞ்சாலைகள் வனப்பகுதியை ஒட்டி செல்கின்றன. குறிப்பாக, செங்கல்பட்டு -- திருப்போரூர் சாலை, சிறுங்குன்றம் -- அனுமந்தபுரம் சாலை, சிங்கபெருமாள் கோவில் -- அனுமந்தபுரம் உள்ளிட்ட சாலைகள் வனப்பகுதிகளுக்கு நடுவே செல்கின்றன. இந்த வனப்பகுதியில், காட்டுப்பன்றி, மான், குரங்கு, முள்ளம்பன்றி உள்ளிட்ட வன விளங்குகளும், மயில், கவுதாரி போன்ற பறவைகளும் உள்ளன. பல இடங்களில், வனத்துறை சார்பில் நாவல், புங்கை உள்ளிட்ட மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வனப்பகுதி மற்றும் சாலை ஓரங்களில், பல இடங்களில் இரவு நேரங்களில் பிளாஸ்டிக் குப்பை, இறைச்சி கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுகின்றன. இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, அவற்றை உண்ண வரும் நாய்களால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும் பிளாஸ்டிக் குப்பையை குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் சாப்பிடுவதால், உடல் உபாதைகளால் அவை பாதிக்கப்படுகின்றன. எனவே, வனப்பகுதியில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story