மாகாணியம் வனப்பகுதியில் குப்பை கொட்டி எரிப்பு: வன ஆர்வலர்கள் கோரிக்கை

மாகாணியம் வனப்பகுதியில் குப்பை கொட்டி எரிப்பு: வன ஆர்வலர்கள் கோரிக்கை

எரிக்கபட்டுள்ள குப்பைகள்

வனப்பகுதிகளில் குப்பை கொட்டி எரிப்பதைத் தவிர்த்து,குப்பையை தரம் பிரித்துக் கையாள வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மாகாணியம் ஊராட்சியில் 1,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் குப்பை மற்றும்கழிவுகள் ஊராட்சி துாய்மை பணியாளர்கள்வாயிலாக சேகரித்து வருகின்றனர்.

அவ்வாறு சேகரமாகும்குப்பைக் கழிவுகள், மாகாணியம் -- சோமங்கலம் சாலையோரம் வனப்பகுதியில் கொட்டி எரிக்கின்றனர். ஊராட்சியில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் வாயிலாக, உரம் தயாரிக்கும் கிடங்கு இருந்தும், ஊராட்சியின் மெத்தனப் போக்கால் செயல்படாமல் உள்ளது. இதனால், மாகாணியம்மலை அடிவாரத்தில்,

வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளில் குப்பை கொட்டி எரிக்கப்படுவதால், அப்பகுதிகளில் இரை மற்றும் தண்ணீர் தேடி வரும் மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது.

எனவே, வனப்பகுதிகளில் குப்பை கொட்டி எரிப்பதைத் தவிர்த்து, கால்நடை மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத விதமாக, திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் வாயிலாக குப்பையை தரம் பிரித்துக் கையாள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story