வடிகாலில் தேங்கி கிடக்கும் குப்பைகள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வடிகாலில் தேங்கி கிடக்கும் குப்பைகள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குப்பைகள் தேங்கியுள்ள வடிகால்

வடிகாலில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

காளையார்கோவில் ஊராட்சிக்குட்பட்ட 6வது வார்டில் யூனியன் அலுவலகம் செல்லும் சாலையில் நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த சாலையில் கழிவு நீர் செல்வதற்கு வடிகால் வசதி அமைக்கப்பட்டது தற்போது இந்த வடிகாலில் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பை கழிவுகள், செடி கொடிகள் வளர்ந்து புதர்கள் போன்று காணப்படுவதால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் வருடக்கணக்கில் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பலவிதமான நோய்களுக்கு ஆளாகின்றனர்.

ஆகையால் ஊராட்சி நிர்வாகம் கழிவுநீர் செல்லும் கால்வாயில் உள்ள கழிவுகளை அகற்றி செடி கொடிகளை சுத்தம் செய்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story