வெங்கடேசபாளையத்தில் மலைப்போல் குவிந்து கிடக்கும் குப்பைகள்

வெங்கடேசபாளையத்தில் மலைப்போல் குவிந்து கிடக்கும் குப்பைகள்

தேங்கியுள்ள கழிவுநீர்

கழிவுநீர் தேக்கம், குப்பை குவியலால் வெங்கடேசபாளையத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி 20வது வார்டு வெங்கடேசபாளையத்தில், கடந்த மாதம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது. இதில், மழைநீர் வெளியேறும் வகையில், சாய்வு விகிதம் கால்வாய்க்கு வாட்டம் வைக்கவில்லை.

இந்நிலையில், மழைநீர் வடிகால்வாயில் அப்பகுதியினர் முறைகேடாக வீட்டு உபயோக கழிவுநீர் விட்டுள்ளனர். ஒரே இடத்தில் கழிவுநீர் தேங்குவதால் கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அப்பகுதியில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது.

கால்வாய் மீது கான்கிரீட் தளம் அமைத்து மூடாததால், வீட்டில் இருந்து வெளியே வரும் குழந்தைகள் கால்வாயில் தவறி விழுந்து விடுகின்றனர். மேலும், இப்பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பை அகற்றப்படாமல் உள்ளது.

குப்பையில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, குப்பையை முறையாக அகற்றவும், கால்வாயில் தேங்கிய கழிவுநீர் வெளியேறவும்,

கால்வாய் மீது தளம் அமைக்கவும், மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் விடுவதை தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்."

Tags

Next Story