காவிரி கரையோரம் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு அபாயம்
சுகாதார சீர்கேடு அபாயம்
பள்ளிபாளையம் பெரியார் நகர் காவிரி கரையோரம் அதிகளவு குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி இருபதாவது வார்டு, பெரியார் நகர் காவிரி கரையோரம் அதிகளவு குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக குப்பைகளை நாய்கள் ,ஆடுகள் ஆகியவை கிளறி திண்பதால், நோய்கள் ஏற்படும் அபாயம் உண்டாகிறது .மேலும் அதிகளவு குப்பை தேக்கத்தால் கொசு உள்ளிட்டவை உற்பத்தியாகிறது. எனவே குப்பைகளை அகற்றிட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
Next Story