சாலையோரம் குப்பை குவியல் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

சாலையோரம் குப்பை குவியல் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

காஞ்சியில் ஜவஹர்லால் நேரு சாலையோரம் குப்பை குவியல் கொட்டியுள்ளதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது


காஞ்சியில் ஜவஹர்லால் நேரு சாலையோரம் குப்பை குவியல் கொட்டியுள்ளதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது

காஞ்சிபுரத்தில் இருந்து சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் வழியாக சென்னை செல்லும் வாகனங்கள், ஜவஹர்லால் நேரு சாலை வழியாக சென்று வருகின்றன. வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இச்சாலையில், நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி பொறியாளர் அலுவலகம் அருகில், மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும், அப்பகுதியில் உணவகம், டீ கடை, பேக்கரி, இறைச்சி கடைகள் உள்ளதால், காற்றில் பறக்கும் குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், அலுவலகத்தில் அமர்ந்து பணி செய்ய முடியவில்லை என, நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் புலம்பி வருகின்றனர். எனவே, ஜவஹர்லால் நேரு சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பையை மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக அகற்றுவதோடு, அப்பகுதியில் மீண்டும் குப்பை கொட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story