மறுசுழற்சி செய்யப்படாமலேயே பாலாற்றில் கொட்டப்படும் குப்பைக்கழிவுகள்

மறுசுழற்சி செய்யப்படாமலேயே பாலாற்றில் கொட்டப்படும் குப்பைக்கழிவுகள்

 ஆம்பூர் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், மறுசுழற்சி செய்யப்படாமலேயே பாலாற்றில் கொட்டப்படும் அவலம் தொடர்கிறது.   

ஆம்பூர் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், மறுசுழற்சி செய்யப்படாமலேயே பாலாற்றில் கொட்டப்படும் அவலம் தொடர்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்யாமல் லாரியின் மூலம் கொண்டு சென்று பாலாற்றில் கொட்டும் அவல நிலை சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை, தார்வழி பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பைகிடங்கில் சேமித்து வைக்கப்பட்டு ,தரம்பிரிக்கப்பட்ட குப்பைகளை மறுசூழற்சி செய்யாமல் லாரிகள் மூலம் கொண்டு பச்சகுப்பம் பகுதியில் உள்ள பாலாற்று படுக்கைகள் கொட்டப்படுவதாகவும், இதனால் சுகாதார சீர்கேடு மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆம்பூர் நகராட்சி குப்பை கிடங்கு துணை மேற்பார்வையாளர் வேலுவிடம் கேட்ட போது, நகராட்சி குப்பை கிடங்கில் அதிக அளவு குப்பைகள் சேர்ந்துள்ளதாகவும், அதனை அகற்றும் குத்தகை உரிமையை ஆம்பூர் அதிமுக, திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் எடுத்துள்ளதாகவும், தெரிவித்தார்.

Tags

Next Story