சாலையோரம் வீசப்படும் குப்பைகள் - வலைகள் அமைத்த நகராட்சி ஊழியர்கள்
குப்பைகள் அகற்றும் துப்புரவு பணியாளர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுகளை பொதுமக்கள் சாலை ஓரம் வீசி செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசி வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு வந்ததுடன் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது ஏற்பட்டது
இந்த நிலையில் குழித்துறை நகராட்சி ஆணையர் ராமதிலகம் உத்தரவின் பேரில் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 20-ல் கீழ் பம்மம், மார்த்தாண்டம் பகுதியில் பொதுமக்களால் சுகாதாரமற்ற முறையில் வீசப்பட்ட கழிவுகள் அகற்றப்பட்டு, குப்பைகள் மீண்டும் வராமல் தடுக்கும் வண்ணம் அப்பகுதி முழுவதும் வலை கட்டப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று குப்பைகளை பொது வெளியில் வீசக்கூடாது என பொதுமக்களுக்கு ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் பொது மக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.