தர்மபுரியில் பூண்டு விலை உயர்வு
வரத்து சரிவால் தர்மபுரியில் பூண்டு விலை அதிகரித்து கிலோ 260 க்கு விற்பனையாகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் ஐந்து உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினந்தோறும் சுற்றுவட்டார பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளை விவசாயிகள் நேரடியாக கொண்டு வந்து வேளாண்மை துறையின் மூலம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது வழக்கம் மேலும் ஒரு சில மழை பயிர்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது இந்த வகையில் கடந்த நான்கு மாதத்திற்கும் மேலாக பூண்டு வரத்து சரிந்துள்ளதையடுத்து விலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ பூண்டு 235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரு கிலோ பூண்டு கிலோவிற்கு 25 ரூபாய் அதிகரித்து 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் வெளிமார்க்கெட்டுகளில் ஒரு கிலோ 280 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
Next Story