உழவர் சந்தையில் குறையாத பூண்டு விலை - பொதுமக்கள் அதிருப்தி
தர்மபுரியில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் அதிக விலைக்கு வெங்காயம், பூண்டு, இஞ்சி, பீன்ஸ், கத்திரிக்காய், அவரைக்காய், முள்ளங்கி, கோவைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதால் உழவர் சந்தையில் நியாயமான விலை கிடைக்கும் என அனைத்து மக்களும் உழவர் சந்தையை தேடி வருகின்றனர்.
ஆனால் வெளி மார்க்கெட்டில் கிலோ பூண்டு 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் உழவர் சந்தையில் ஒரு கிலோ பூண்டு 238 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகளிடம் முறையிட்டபோது வேளாண் துறை அதிகாரிகள் இது வரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே மாவட்ட நிர்வாகம் வேளாண்துறை விதிமுறைக்கு உட்படாமல் தன்னிச்சையாக நடந்து கொள்ளும் உழவர் சந்தை கடை குத்தகைதாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது கடை குத்தகையை ரத்து செய்ய வேண்டும் என நுகர்வோர்கள் தெரிவித்தனர்.