வரத்து சரிவால் பூண்டு விலை உயர்வு

தர்மபுரி உழவர் சந்தையில் வரத்து குறைவால் கடந்த வாரத்தை காட்டிலும் ,பூண்டு ஒரு கிலோவிற்கு 60 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.
தர்மபுரி நான்குரோடு பகுதியில் அமைந்துள்ளது வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் கீழ் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் அத்தியாவசிய காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பூண்டு வரத்து குறைவால் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில் கடந்த வாரம் ஒரு கிலோ பூண்டு 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று காலை நிலவரப்படி ஒரு கிலோ பூண்டு 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.

Tags

Next Story