நாச்சியார்கோயிலில் கருட சேவை

நாச்சியார்கோயிலில் கருட சேவை

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலிலுள்ள வஞ்சுளவல்லித் தாயார் உடனாய சீனிவாசப் பெருமாள் கோயிலில் முக்கோடித் தெப்பத் திருவிழாவையொட்டி, கல் கருடச் சேவை நடந்தது.

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலிலுள்ள வஞ்சுளவல்லித் தாயார் உடனாய சீனிவாசப் பெருமாள் கோயிலில் முக்கோடித் தெப்பத் திருவிழாவையொட்டி, கல் கருடச் சேவை நடந்தது.

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலிலுள்ள வஞ்சுளவல்லித் தாயார் உடனாய சீனிவாசப் பெருமாள் கோயிலில் முக்கோடித் தெப்பத் திருவிழாவையொட்டி, கல் கருடச் சேவை செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

108 வைணவத் திவ்யதேச தலங்களில் 20 ஆவது தலமாக வும், முக்தி தரும் 12 கோயில்களில் 11 ஆவது தலமாகவும் போற்றப்படும் இக்கோயிலில் ஆண்டுதோறும் முக்கோடித் தெப்பத் திருவிழாவும், அதையொட்டி பிரசித்தி பெற்ற கல்கருடச் சேவையும் விமரிசையாக நடைபெறும். அதன்படி நிகழாண்டு முக் கோடித் தெப்பத் திருவிழா டிசம்பர் 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் - தாயார் வீதி உலா நடைபெறுகிறது. இந்நிலையில், முக்கிய நிகழ்வான கல்கருடச் சேவை செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக பெருமாள்-தாயார் வீதியுலாவும், மாலை 6.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் பெருமாள் தாயார் வாகன மண்டபத்தில் எழுந்தருளலும் நடைபெற்றது.

பின்னர், கல்கருட வாகனத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சேவை சாதித்தார். கல் கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாளை சன்னதியிலிருந்து முதலில் 4 பேர் தூக்கி வந்தனர். பின்னர், படிப்படியாக சுமை அதிகரித்ததால் 8, 16, 32, 64 பேர் என அதிகரித்துக் கொண்டே இறுதியில் நூற்றுக்கும் அதிகமானோர் தூக்கிச் சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து, ஓலைச் சப்பர வீதி உலா நடைபெற்றது. இதே போல, டிசம்பர் 24 ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் தெப்பத் திருவிழா நடைபெறவுள்ளது.

Tags

Next Story