எடப்பாடியில் மத்திய அரசின் திட்டத்தில் 100 பயனாளிகளுக்கு எரிவாயு இணைப்பு
எடப்பாடியில் மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் 100 பயனாளிகளுக்கு எரிவாயு இணைப்பு
சேலம் மாவட்டம் எடப்பாடியில் மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் 100 பயனாளிகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு எரிவாயு உருளை, அடுப்பு உள்ளிட்டவைகளை வழங்கினார்... இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கே.பி .ராமலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறுகையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வை ஆதரிக்கும் போது தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு 50 லட்சம் கையெழுத்து பெரும் இயக்கத்தை நடத்தி வருவது வேடிக்கையாக உள்ளது. திமுகவில் ஒன்ற கோடி தொண்டர்கள் உள்ள கட்சி ஆனால் அதில் 50 லட்சம் கையெழுத்து பெரும் முயற்சியில் மட்டுமே திமுக ஈடுபட்டு வருவதால் ஒரு கோடி திமுக தொண்டர்கள் நீட் தேர்வை ஆதரிப்பதாகத்தான் பொருள் அதனால் நீட் தேர்வுக்கு விளக்கு அளிக்க முடியாது கட்டாயம் தமிழகத்தில் நீட் தேர்வு நடந்தே தீரும் திமுகவின் பொய் பிரச்சாரத்தை நம்பி மாணவர்கள் நீட் தேர்வு ரத்தாகிவிடும் என்று நினைத்து ஏமாற வேண்டாம். நீட் தேர்வு எழுதினால் மட்டுமே மாணவர்களின் கல்வித் தரம் படிப்பு வேலை வாய்ப்பு அனைத்தும் தரமானதாக இருக்கும். நீட் தேர்வை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையிலும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நீட்டை அறிமுகப்படுத்தியவர்களே திமுகவும் காங்கிரசும் தான். தற்பொழுது அதற்கு எதிராக திமுகவும் காங்கிரசும் போராடுவது வேடிக்கையாக உள்ளது. மேலும் தமிழகத்தில் திமுகவை சேர்ந்தவர்களுக்கு பதினாறு மது ஆலைகள் உள்ளது. பல்வேறு ரசாயன கலவைகள் கலந்து மனித உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மதுபானங்களை தடை செய்ய வேண்டும். கமிஷனுக்காக நடத்தப்படும் மது ஆலைகளையும், மதுக்கடையை மூடிவிட்டு மனித உடலுக்கு தீங்கு விளைவிக்காத கள்ளுக்கடையை தமிழகத்தில் திறக்க வேண்டும். கள்ளுக்கடையை திறந்தால் தென்னை விவசாயிகளின் வாழ்வு செழிக்கும் மனிதர்கள் உயிரிழப்பு குறையும் இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மதுக்கடையை மூடி விட்டு கல்லு கடையை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
Tags
Next Story