உஜ்வாலா யோஜனா திட்டத்தில் 150 பேருக்கு இலவச கேஸ் இணைப்பு
கேஸ் அடுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அண்ணாமலையார் கேஸ் ஏஜென்சி அலுவலகத்தில் நேற்று காலை பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த ஏழை எளிய மக்கள் 150 பேருக்கு இலவச கேஸ் அடுப்புகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு அண்ணாமலையார் கேஸ் உரிமையாளர் ரமணிபாய் தலைமை வகித்தார். மேனேஜர் சத்தியன் முன்னிலை விகித்தார். விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சேத்துப்பட்டு தாலுக்கா டிஎஸ்ஓ சுமதி ஏழை எளிய மக்கள் 150 பேருக்கு இலவச சிலிண்டர், அடுப்பு, ரெகுலேட்டர், டியூப், லைட்டர் ஆகியவற்றை வழங்கி பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து பயனாளிகளிடம் பேசினார். இதில் அலுவலக ஊழியர்கள் பயனாளிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story