கோடை வெயில் தாக்கம் திமுகவினருக்கு கீதாஜீவன் வேண்டுகோள்

கோடை வெயில் தாக்கம் திமுகவினருக்கு  கீதாஜீவன் வேண்டுகோள்

அமைச்சர் கீதா ஜீவன்

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் பொதுமக்களுக்காக நீர்மோர் பந்தல் அமைக்க திமுகவினருக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் பொதுமக்களுக்காக நீர்மோர் பந்தல் அமைக்க திமுகவினருக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியதை தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகாித்து வருகிறது வரும் நாட்களில் வெயில் தாக்கம் அதிகாிக்கும் என வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

எனவே பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் குடிநீர், நீர் மோர், குளிர்பானங்கள் வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மாநகராட்சி வார்டுகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் பேருந்து நிறுத்தங்கள், ஆகியவற்றில் நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும். இதற்கு கட்சியின் ஓன்றிய நகர பகுதி பேரூர் வார்டு கிளை அமைப்புகளும் சார்பு அணிகளும் இணைந்து செய்திட வேண்டும் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் தொிவித்துள்ளார்.

Tags

Next Story