நாமக்கல்லில் பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு

நாமக்கல்லில் பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு

கவுரவிப்பு

நாமக்கல்லில் பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

நாமக்கல் மொபைல் சேல்ஸ் & சர்வீஸ் அசோசியேசனின் பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நாமக்கல், திருச்செங்கோடு சாலை, ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ராயல் பத்மநாபன் தலைமை தாங்கினார்.

செயலாளர் ராகவன் வரவேற்புரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்டத் தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நாமக்கல் நகர காவல் ஆய்வாளர் சங்கரபாண்டியன், உதவி காவல் ஆய்வாளர் செல்லதுரை, நாமக்கல் பவுல்ட்ரி டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவர் குமரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் நாமக்கல் நகர சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நகர தலைவராக தலைவர் LRN ரிஜ்வான், செயலாளராக எவரெஸ்ட் ராஜா, பொருளாளராக செல்பேலஸ் ராகவன், துணைத் தலைவர்களாக கணேஷ் மொபைல் கணேஷ், சதீஷ் மொபைல் சதீஷ், துணைச் செயலாளராக பிரபு மொபைல் பிரபு, ஹரி பாலா, செய்தி தொடர்பாளராக தமிழ் மொபைல் பூந்தமிழன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் முன்னிலை மொபைல் சேல்ஸ் & சர்வீஸ் அசோசியேசனின் மாவட்ட சங்கம் உருவாக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சங்கத்தின் மாவட்ட தலைவராக ராயல் பத்மநாபன், கெளரவ தலைவராக RR மொபைல் ரவி, மாவட்ட செயலாளராக ராகவன், மாவட்ட பொருளாளராக நிசி சுரேஷ், மாவட்டத் துணைத் தலைவர்களாக ஸ்ரீ மொபைல் ரமேஷ், சேகர் மொபைல் சிவச்சந்திரன், மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளராக NTC மொபைல் செல்வராகவன், சேந்தமங்கலம் ஒருங்கிணைப்பாளராக சக்சஸ் மொபைல் கார்த்திக், லிங்கம் மொபைல் லிங்கம், எவரெஸ்ட் மொபைல் அஜித், பெரியமணலி ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன் கம்யூனிகேஷன் சுரேஷ்குமார், வேலகவுண்டம்பட்டி ஒருங்கிணைப்பாளராக ராயல் மொபைல் முஹம்மது இத்ரீஸ், வளையபட்டி ஒருங்கிணைப்பாளராக ரோஹித் மொபைல் மோகன், மோகனூர் ஒருங்கிணைப்பாளராக பிரண்ட்ஸ் மொபைல் மணி, புதன்சந்தை ஒருங்கிணைப்பாளராக MS மொபைல் சரவணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாமக்கல் மொபைல் சேல்ஸ் & சர்வீஸ் அசோசியேசன், பரமத்தி வேலூர் தாலுக்கா அலைபேசி சங்கம் மற்றும் எருமப்பட்டி ஒன்றிய மொபைல் சங்கம் ஆகிய சங்கங்கள் மாவட்ட சங்கத்தின் அதிகாரபூர்வ இணைப்பு சங்கங்களாக அறிவிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டச் செயலாளர் பொன். வீரகுமார், ஒருங்கிணைப்பாளர் சேந்தை கோபாலகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் வாசு சீனிவாசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மரக்கடை அருண்குமார், இணை செயலாளர் பிரபாகரன், பரமத்தி வேலூர் தாலுக்கா அலைபேசி சங்க நிர்வாகிகள், எருமப்பட்டி ஒன்றிய மொபைல் சங்க நிர்வாகிகள், பவானி மொபைல் அசோசியேசன் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை சேகர் மொபைல் சிவச்சந்திரன் தொகுத்து வழங்க, நிறைவாக சங்க பொருளாளர் நிசி சுரேஷ் நன்றி கூறினார்.

Tags

Next Story