மரச்சிற்ப தொழிலாளர்கள் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
தென்னிந்திய மரச்சிற்ப தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் ஐந்தாவது பொதுக்குழு கூட்டம், மாமல்லபுரத்தில் நடந்தது. இதில், தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
துவக்கத்தில், 2023 - 2025ம் ஆண்டிற்கான, சங்க நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக முரளி, செயலராக பாலசுந்தரம், பொருளாளராக ரமேஷ், துணை தலைவராக பாலன், துணை செயலராக ஞானஒளி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து,
செயலர் பாலசுந்தரம் தலைமையில் கூட்டம் நடந்தது. உறுப்பினர்களுக்கு, விபத்து காப்பீடு அளித்து, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட தீர்மானித்தனர். மேலும், கணினி வாயிலாக மரச்சிற்பங்கள், கதவுகள் உள்ளிட்டவை வடிவமைக்கும் தொழில் நிறுவனத்திற்கு, தமிழக அரசு சலுகை விலையில் மின்சாரம் வழங்க கோரியும் வலியுறுத்தினர்.