பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்
குறைதீர் முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக திட்ட குறைதீர்வு முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் அய்யாகண்ணு தலைமை வகித்தார். முகாமில் மக்களிடமிருந்து பெயர் சேர்க்கை, நீக்கம் தொடர்பாக 25 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதில் வருவாய் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story