பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்
சிறப்பு முகாம்
கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு குறைகேட்பு முகாம் நடந்தது.குடிமைப்பொருள் தனி தாசில்தார் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். முகாமில், ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் இணைத்தல், புதிய அட்டை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 44 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது.
Next Story