பதற்றமான வாக்குச்சாவடிகளை பொது தேர்தல் பார்வையாளர் பார்வையிட்டு ஆய்வு

பதற்றமான வாக்குச்சாவடிகளை பொது தேர்தல் பார்வையாளர்  பார்வையிட்டு ஆய்வு

விராலிமலை பேரவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை பொது தேர்தல் பார்வையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


விராலிமலை பேரவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை பொது தேர்தல் பார்வையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விராலிமலை பேரவைத் தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை பொது தேர்தல் பார்வையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கரூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட, விராலிமலை சட்டப்பேரவை தொகுதியில் இலுப்பூர் வட்டம் பெருமாநாடு, நிலையப்பட்டி, கீழக்குறிச்சி,திருநல்லூர், குளத்தூர் வட்டம் தொண்டைமான் நல்லூர், விராலிமலை வட்டம் தென்னம்பாடி ஆகிய ஆறு வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளை பொது தேர்தல் பார்வையாளர் ராகுல் அசோக் ரேகவர் பார்வையிட்டு வாக்குச்சாவடி மையங்கள் பாதுகாப்பு குறித்தும் வாக்குபதிவின் போதுகடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வில், விராலிமலை வட்டாட்சியர் கருப்பையா, விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன்(கிஊ) உள்ளிட்ட தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story