பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் : ஆட்சியர் அறிவுரை!

பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் :  ஆட்சியர் அறிவுரை!

மாணவ, மாணவிகள் நூலகம் சென்று பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ‘என் கல்லூரிக் கனவு” நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி அறிவுரை வழங்கினார்.


மாணவ, மாணவிகள் நூலகம் சென்று பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ‘என் கல்லூரிக் கனவு” நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி அறிவுரை வழங்கினார்.
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (18.05.2024) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2023-24ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் ‘என் கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையேற்று, மாணவ, மாணவியர்களுடன் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்ததாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை மேம்படுத்தவும், இடைநிற்றல் எண்ணிக்கையை குறைக்கவும் ‘என் கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் முன்னெடுப்பு திட்டம் வருடந்தோறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி 2 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக நமது மாவட்டத்தின் 24.04.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 2ம் கட்டமாக இன்று தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.

Tags

Next Story