89 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக பொது மேலாளர் தகவல்

89 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக பொது மேலாளர் தகவல்

89 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக பொது மேலாளர் தகவல்

திண்டுக்கல் மண்டலத்தில் 89 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திண்டுக்கல் மண்டல பொது மேலாளர் துரைசாமி கூறியிருப்பதாவது திண்டுக்கல் மண்டலத்தில் நகர் பகுதியில் 309 மற்றும் புறநகர் பகுதியில் 489 என 798 வழித்தட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 32 புதிய பேருந்து கூண்டு கட்டுமான பணிகள் நிறைவடைந்து பதிவு செய்யப்படும் வேலைகள் நடைபெற்று தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 13% பேருந்துகள் புதியவையாக மாற்றம் செய்யப்படுகின்றது. மேலும் வரும் மாதங்களிலும் இவ்வாறான பேருந்துகள் நிறுத்தப்படும்.

திண்டுக்கல் மண்டலத்தில் பேருந்துகள் பராமரிப்பினை மேம்படுத்தும் பொருட்டு கிளைகளில் தினசரி ஒருநாள் ஒரு பஸ் என பராமரிப்பு பணிகள் மற்றும் பூண்டு பணிகள் அனைத்தும் பார்த்து பயணத்தடைகள் இல்லாமல் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இயக்கிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story