திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

பொதுகூட்டம்

விருதுநகர் மாவட்ட தேசபந்து மைதானத்தில் திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது

விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கான வர வணக்கநாள் பொதுக்கூட்டம் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தென்சென்னை நாளாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் முன்னிலையில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது. மேலும் மேடையில் வைக்கப்பட்டு இருந்த மொழிப்போர் தியாகிகளுக்கு படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மொழிக்காக தமது தேக்குமரத் தேகங்களை தீக்கிரையாக்கி தமது குடும்பத்தை பற்றிக்கூட நினைக்காமல் மொழிக்கு ஒரு ஆபத்து என்றவுடன் உயிரையும் மாய்த்துக்கொண்ட மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதாக தெரிவித்தார்.

மேலும், 2400 ஆண்டுகளாக கோலோச்சும் தமிழ்மொழியை அழிப்பதன் வாயிலாக தமிழர்களின் உணர்வுகளை அழித்துவிடலாம் என பி.ஜே.பி நினைக்கிறது என்றும் அதற்கு துணைபோன அதிமுகவும் அப்படித்தான் இருக்கிறது என்றார். மேலும் மொழிப்போர் தியாகி களுக்கு வீரவணக்கம் செலுத்த தகுதியுள்ள ஒரே இயக்கம் திமுக மட்டும்தான் என்றார். திமுக ஆட்சி இருந்தாலும் இல்லா விட்டாலும் மொழிக்கு ஒரு ஆபத்து என்றால் முதல் குரல் கொடுக்கும் இயக்கம் திமுக தான்,அதன் தலைவர் ஸ்டாலின் தான் என்றார். மொழிக்காக பதவியை இழந்து சிறை சென்றவர்கள் திமுகவினர் எனவே வீர வணக்க நாள் நடத்த எங்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது.

மேலும், பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லியில் அமர்ந்து கொண்டு திமுகவை அழிக்க நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது என்றும் உங்களது சதியை தேர்தல் களத்தில் முறியடிப்போம் என்றார். மேலும் வருகிற நாடாளு மன்ற தேர்தல் என்பது தமிழ்நாட்டை வஞ்சிக்கக்கூடிய பிஜேபி அரசு தமிழ்நாட்டின் உரிமைகளை மறுக்க கூடிய அரசு என்றார். மேலும் நீட் தேர்வு மூலம் நம்முடைய மாணவர் களின் மருத்துவ கனவை நசுக்கக் கூடிய அரசு எனவும் நிதி ஒதுக்கீடுகளை குறைத்து தமிழகத்தை நசுக்கிய அரசு என குற்றம் சாட்டினார். எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். மேலும் மாநில உரிமையை மீட்டெடுப்பதற்காகவும் நம்முடைய நிதி ஆதாரங்களை உரிமையோடு பெற்றுக் கொள்வதற்காகவும் வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக ஆதரிக்கும் இந்தியா கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசினார் .

பின்னர் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி தமிழச்சி தங்கப் பாண்டியன் பேசிய போது நம்முடைய தமிழ் பண்பாட்டின் அடையாளமான ஏறு தழுவுதல் அரங்கத்தை மதுரையில் முதல்வர் திறந்து வைத்து இருக்கின்றார் என்றார். மேலும் 2400 ஆண்டுகளுக்கு பெருமை உள்ளவர்கள் தமிழர்கள் என்றார். நம்முடைய கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை இந்தி திணிப்பை நாம் என்றைக்கும் எதிர்ப்போம் என்றார். மொழியின் பால் நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கு தக்க பாடம் புகுத்த தான் வருகிறது நாடாளுமன்ற தேர்தல் என்றார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் என்பது மிக முக்கியமானது என்றார். ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என தீர்மானிக்கக்கூடிய முக்கியமான தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் என தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார்.

Tags

Next Story