இனப்படுகொலையை நடத்தியவன் இன்றும் சுதந்திரமாக இருக்கிறான் - வைகோ !

இனப்படுகொலையை நடத்தியவன் இன்றும் சுதந்திரமாக இருக்கிறான் - வைகோ !

வைகோ 

இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு 15 ஆவது நினைவேந்தல் நிகழ்வு பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது.

மே 17 இயக்கம் சார்பில் நடைபெறும் இந்த நினைவேந்தலில் 300 க்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்றனர்.

இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கவும், தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தவும் இந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் உருவப்படம் பெசன்ட் நகர் கடற்கரை மணலில் மலர்கள் சூழ அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஓவியர் ட்ராஸ்கி மருது, இயக்குநர் கவிதா பாரதி உள்ளிட்டோர் பாலச்சந்திரன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஈழப்போரின் போது கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவுபடுத்தி தான் இங்கு தீபங்கள் ஏற்றப்பட்டன. சுதந்திர தமிழிலும் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வாகும். தமிழீழத்தை சுதந்திர நாடாக அறிவிக்க வேண்டும். மேலும் குற்றத்தின் ஈடுபட்ட நபர்கள் மீது குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கையாக உள்ளன.

தனி ஈழத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஹிட்லர் கொலை தான் செய்தான். ஆனால் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டார்கள். இனப்படுகொலையை நடத்தியவன் இன்றும் சுதந்திரமாக இருக்கிறான். இந்திய அரசின் உதவியை பெற்றுக் கொண்டு சிங்களவன் தமிழர்களை அழித்தான்.40 நாடுகள் வாக்கெடுப்பு நடத்தி தனி நாடுகளாகிவிட்டன.

இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்த தமிழ்நாடு அரசுக்கும் காவல்துறைக்கும் எனது நன்றி என்றார்.

Tags

Next Story