கனடாவில் குடியுரிமை பெற்றுத் தருவதாக ரூ. 98 லட்சம் மோசடி

கனடாவில் குடியுரிமை பெற்றுத் தருவதாக  ரூ. 98 லட்சம் மோசடி

பைல் படம் 

கனடா நாட்டில் குடியுரிமை பெற்றுத் தருவதாகக் கூறி மதுரையைச் சோ்ந்த தொழிலதிபரிடம் ரூ. 98 லட்சம் மோசடிசெய்த திருச்சியைச் சோ்ந்த 3 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது

மதுரை மேலூா் வாஞ்சிநகரம் பகுதியைச் சோ்ந்தவா் கலைவாணன் (44). இவா் துபை நாட்டில் தொழிலதிபராக உள்ளாா். இந்நிலையில் அங்கு பணியாற்றி வந்த திருச்சி மாவட்டம் துறையூா் மருவத்தூா் பெருமாள் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்த பெரியசாமி, ஸ்ரீரங்கம் வஉசி தெரு பாலாஜி என்கிற சிவராஜன், திருச்சி காட்டூா் விக்னேஷ் நகா் செல்வகுமாா் ஆகியோா் கலைவாணன் மற்றும் குடும்பத்தினருக்கு கனடா நாட்டின் குடியுரிமை பெற்றுத் தருவதாக ஆசை வாா்த்தை கூறியுள்ளனா்.

இதை நம்பிய கலைவாணன் முதலில் தனது மனைவி வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 4 லட்சம் அனுப்பி வைத்தாா். பின்னா் நேரடியாக ரூ. 2 லட்சமும், தொடா்ந்து 2020 மாா்ச் முதல் 2023 பிப்ரவரி வரை பல தவணைகளாக ரூ. 98 லட்சம் கொடுத்தாா். ஆனால் அவா்கள் கூறியபடி கனடா நாட்டு குடியுரிமை பெற்றுத் தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த கலைவாணன் திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் புகாா் கொடுத்தாா்.

அதன் பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் மூவா் மீதும் மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Read MoreRead Less
Next Story