மதுரை வேளாண் கல்லூரியில் ஜிஐ மஹோத்சவ், மாபிஃப் மேளா 1. 0

மதுரை வேளாண் கல்லூரியில் ஜிஐ மஹோத்சவ், மாபிஃப்  மேளா 1. 0

 ஜிஐ மஹோத்சவ், மாபிஃப் மேளா 1. 0

மதுரை வேளாண் கல்லூரியில் நடந்த ஜிஐ மஹோத்சவ், மாபிஃப் மேளா 1. 0வில் 187 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

குறு சிறு நடுத்தர வர்த்தக அமைச்சகம் (MSME), நபார்டு வங்கி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகியோருடன் மதுரை வேளாண் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மையம் (MABIF) இணைந்து நடத்தும் GI Mahotsav cum MABIF Mela 1.0 மாபெரும் கண்காட்சி 24ம் தேதி முதல் 26ம் தேதி வரையிலும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை மதுரை வேளாண்மைக் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறையின் கூடுதல் இயக்குனர் K.முரளிதரன், மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதன்மையர் முனைவர் P.P.மகேந்திரன், வேளாண் தொழில் வளர்ச்சி இயக்குனரகம், TNAU, இயக்குனர் முனைவர்.E.சோமசுந்தரம், MABIF தலைமைச் செயல் அலுவலர் K.கணேஷ்மூர்த்தி கலந்து கொண்டனர்.

வெற்றிகரமாக இயங்கி வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் அனுபவம் பகிர்வு, நாப்கிஷான், முன்னோடி வங்கியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் Startups மற்றும் FPOக்களின் சந்திப்பு, பிராண்டிங், பேக்கேஜிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங் சம்பந்தமாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணாக்கர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நிறைவுற்றது. மூன்றாம் நாள் நிகழ்ச்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story