திண்டுக்கல்லில் ராட்சத பலூன் பறக்க விடல்
ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் மெகா சைஸ் பலூன் பறக்க விடப்பட்டது.100 சதவீத வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது
100 சதவீத வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான பூங்கொடி விழிப்புணர்வு வாசகங்கள் பொருத்தப்பட்ட ராட்சத பலூனை பறக்க விட்டார்.
அப்போது அவர் கூறியதாவது: பொதுமக்கள் தேர்தலை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலகில் எந்த நாடுகளிலும் இதுபோல் தேர்தல் நடக்காது. மக்கள் எந்த வித அச்சமின்றி தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு ஓட்டு அளிக்கலாம். வெயில் அதிகமாக உள்ளது என்று,
யாரும் ஓட்டுச்சாவடிக்கு போகாமல் இருக்க கூடாது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குடிநீர்நீழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சென்று ஓட்டளிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
Next Story