மேட்டூரில் ராட்சத மலை பாம்பு பிடிபட்டது
மேட்டூரில் ராட்சத மலை பாம்பு பிடிபட்டது
மேட்டூர் அருகே பிடிப்பட்ட 12 நீள மலை பாம்பு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
சேலம் மாவட்டம்,மேட்டூர் அருகே கொளத்தூர் கோவில் பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி ( 55). இவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகு கட்டைக்குள் மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து குப்புசாமி உடனடியாக மேட்டூர் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் விறகு கட்டைகள் மறைந்து இருந்த 12 அடி நீளம் மலைப்பாம்பை உயிருடன் பிடித்து கோனிப் பையில் போட்டு மூட்டை கட்டினர். பின்னர் வனதுறையினர் மலைப்பாம்பை, பாலமலை அடர்ந்த வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று விடுவித்தனர்.
Next Story