தென்னை மரத்தில் முளைத்த ஒன்றரை கிலோ எடை கொண்ட ராட்சத காளான்

தென்னை மரத்தில் முளைத்த ஒன்றரை கிலோ எடை கொண்ட ராட்சத காளான்

அருமனை அருகே இடி விழுந்து பட்டு போன தென்னை மரத்தில் ஒன்றரை கிலோ எடை கொண்ட ராட்சத காளான் முறைத்துள்ளது. 

அருமனை அருகே இடி விழுந்து பட்டு போன தென்னை மரத்தில் ஒன்றரை கிலோ எடை கொண்ட ராட்சத காளான் முறைத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி வயலின் கரை பகுதியில் சமீபத்தில் இடி மின்னலுடன் மழை பெய்தது. அதற்கு அடுத்த நாள் இடி விழுந்து பட்டுபோன தென்னை மரத்தில் திடீரென 3 காளான்கள் துளிர் விட்டன.ஆனால் அவை சிறிய தாக அல்லாமல் ராட்சத காளானாகவளர்ந்துள்ளன. இதனை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியின் எதிர்புறத்தில் வசிக்கும் பிரேமா என்பவர் கண்டு ஆச்சரியமடைந்தார்.

உடனே அவற்றை ஆர்வத்துடன் பறித்து வந்தார். இந்த காளான் அரியவகை இடி- மின்னல் காளான் ஆகும். இவை ஒவ்வொன்றும் சுமார் ஒன்றரை கிலோ எடை உள்ளது. சுமார் 35 முதல் 40 டிகிரி சென்டிமீட்டர் நீளம் கொண்டுள்ளது. இந்த காளானை சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

Tags

Next Story