தண்டவாளத்தில் ராட்சத பாறை: ரயிலை கவிழ்க்க சதி?

தண்டவாளத்தில் ராட்சத பாறை: ரயிலை கவிழ்க்க சதி?

தண்டவாளத்தில் இருந்த பாறைகள்

அந்தியோதயா ரயில் கொடைரோடு - அம்பாத்துரை இடையே வந்தபோது காமலாபுரம் பிரிவு அருகே தண்டவாளத்தில் ராட்சத பாறையும், அதன் அருகே சிறு சிறு கற்களும் இருந்தது.

நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் அந்தியோதயா ரெயில் நேற்று இரவு திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தது. கொடைரோடு - அம்பாத்துரை இடையே வந்து கொண்டு இருந்தபோது காமலாபுரம் பிரிவு அருகே தண்டவாளத்தில் ராட்சத பாறையும், அதன் அருகே சிறு சிறு கற்களும் இருந்தது.

இதனை ரயில் ஓட்டுனர் கவனித்து விட்டதால் உடனடியாக ரயிலை நிறுத்தினார். பின்னர் உதவியாளர்களோடு கீழே இறங்கி தண்டவாளத்தை சோதனை செய்தனர்.இது குறித்து திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் சுனில்குமார், கொடைரோடு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் வந்து சோதனை நடத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story