மேட்டூரில் பிடிபட்ட ராட்சத பாம்பு
மேட்டூரில் பிடிபட்ட ராட்சத பாம்பு
மேட்டூர் அருகே விவசாய நிலத்தில் பிடிபட்ட 15 அடி நீளம் மலைப்பாம்பு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே சங்கிலி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பாப்பாத்தி. இவரது விவசாய நிலத்தில் சோளத்தட்டு அறுவடை செய்யும் பணி நடைபெற்றது. அப்போது 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சோளக்காட்டில் இருப்பது தெரிய வந்தது.
இதனை கண்ட கிராம மக்கள் மலைப்பாம்பை உயிருடன் பிடித்து சாக்கு பையில் கட்டி மேட்டூர் வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக எடுத்துச் சென்று தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பாலாறு வனப்பகுதிக்குள் விட்டுச் சென்றனர்.
Tags
Next Story