மலைச்சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த ராட்சத மரம் - போக்குவரத்து பாதிப்பு

மலைச்சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த ராட்சத மரம் - போக்குவரத்து பாதிப்பு

சாலையில் முறிந்து விழுந்த மரம் 

கொடைக்கானல் மேல் மலை கிராம பகுதியில் பெய்த மழையில் மன்னவனூர் கைகாட்டி அருகே சாலையின் குறுக்கே ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல் மலைக்கிராம பகுதிகளான மன்னவனூர், கீழான வயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பிற்பகல் வேளையில் மிதமான மழை பெய்த நிலையில் மன்னவனூர் கை காட்டி அருகே ராட்சத மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்ததில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது, இதனால் இந்த பகுதியை கடந்து சுற்றுலாப்பயணிகளும்,விவசாய பணிகளுக்கு செல்லும் விவசாயிகளும், பொதுமக்களும் செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.

அதே போல மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் இந்த சாலையை கடக்க முடியாமல் அவதியடைந்தனர், இதனால் நூற்று கணக்கான வாகனங்கள் சாலையில் அணி வகுத்து காத்திருந்தன, தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மரத்தினை அறுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர், இதனால் இப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story