சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்; போக்குவரத்து பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நேற்று காலை வேளை முதலே இடைவெளி விட்டு ஒரு சில இடங்களில் கன மழையாகவும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழையாகவும் தொடர்ந்து பெய்து வருகிறது, இந்நிலையில் கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் வாழைகிரி அருகே நேற்று இரவு ராட்சத மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது,
இதனால் இந்த சாலையை கடக்க முடியாமல் நூற்று கணக்கான வாகனங்கள் சாலையின் இருபுறங்களிலும் இரண்டு மணி நேரமாக காத்திருந்தன, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், நெடுஞ்சாலை துறையினர், மற்றும் சாலையில் நின்றிருந்த வாகன ஓட்டுனர்கள் இணைந்து பெய்து வரும் மழை யினையும் பொருட்படுத்தாது மரத்தினை அறுத்து அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,
இதனால் இப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டது, 2 மணி நேரத்திற்கு பிறகு மரம் அகற்றி அப்புறப்படுத்தியதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது, இந்த சம்பவத்தால் மலைச்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது...