சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு.

குஞ்சப்பணை பகுதியில் ராட்சத மரம் விழுந்தது.

மேட்டுப்பாளைத்தில் இருந்து கோத்தகிரி செல்லக்கூடிய மலை பாதையில் ஆங்காங்கே ஆபத்தான முறையில் ராட்சத மரங்கள் உள்ளன. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கோத்தகிரியில் பெய்த கனமழை காரணமாக மலைப்பாதையில் நான்கு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் விழுந்தன.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உடனடியாக தேசிய நெடுஞ்சாலை துறையினர் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக போராடி மண் சரிவை அகற்றினர். இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து குஞ்சபண்ணை வரை உள்ள ஆபத்தான மரங்களை அகற்றும் பணிகள் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வரும் நிலையில் இன்று மீண்டும் குஞ்சப்பணை பகுதியில் ராட்சத மரம் விழுந்தது.

அப்போது வாகனங்கள் ஏதும் செல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் ராட்சத மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மரம் விழுந்ததால் நீலகிரியின் முக்கிய மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது.

Tags

Next Story