கொட்டும் மழையில் குடையுடன் கிரிவலம்
தோரணமலை முருகன் கோயில் கொட்டும் மழையில் குடையுடன் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
தோரணமலை முருகன் கோயில் கொட்டும் மழையில் குடையுடன் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மாதாபுரத்தில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தோரணமலை முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று மாலையில் வைகாசி விசாகம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சுமார் 6 கி.மீட்டர் தூரம் தோரணமலையை சுற்றி கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் குடை பிடித்தவாறு பக்தர்கள் கிரிவலம் வந்தனர். இதில் தோரணமலை முருகன் கோயில் சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது நிகழ்ச்சிகள் திரளான பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர், நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story