பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
 திண்டிவனத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பேரணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
திண்டிவனத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பேரணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை மற்றும் சைல்டுலைன் அமைப்பு சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி திண்டிவனத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட சமூகநல அலுவலர் ராஜாம்பாள் தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், திண்டிவனம் நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றி வேல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் பார்கவி, தாசில்தார் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சைல்டுலைன் நிர்வாகி லட்சுமிபதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் திண்டிவனம் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திரும ணம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியானது தாலுகா அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழி யாக சென்று மயிலம் சாலையில் முடிவடைந்தது, இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் ஷீலாதேவி சேரன், சைல்டுலைன் சீனுபெருமாள், திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன், பெண்கள் பாதுகாப்பு அலுவலர் முத்தமிழ் ஷீலா, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாக அலுவலர் பத்மாவதி, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள், பல்வேறு துறை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் விழுப்புரம் பெண்கள் ஆதார மைய ஆர்த்தி எப்சிபா நன்றி கூறினார்.

Tags

Next Story