பெரம்பலூர் அருகே சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி மாணவி உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி மாணவி உயிரிழப்பு

மாணவி இறப்பு

பெரம்பலூர் அருகே சார்ஜ் போடும் போது மின் கசிவால் பள்ளி மாணவி உயிரிழந்தார்.

பெரம்பலூர் அருகேயுள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி - பவளக்கொடி தம்பதியினர். இவர்களது மகள் நிகிதாஸ்ரீ வயது -10, மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் ஜூன் 24ஆம் தேதி பெற்றோர்கள் இருவரும் கூலி வயல் வேலைக்கு சென்று விட்ட நிலையில், பள்ளிக்கு சென்றிருந்த மாணவி நிகிதாஸ்ரீ, தனக்கு இயற்கை உபாதைக்காக வயிறு வலிப்பதாகவும், வீட்டிற்கு செல்வதாகவும் ஆசிரியர்களிடம் கூறிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டிற்கு சென்ற நிகிதாஸ்ரீ வீட்டில் இருந்த செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மின் கசிவினால் மின்சாரம் தாக்கியதில் நிகிதாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவர் உயிரிழந்த சம்பவம் யாருக்கும் தெரியாத நிலையில், வயல் வேலைக்கு சென்று இருந்த பெற்றோர் இரவு வீடு திரும்பி வந்து பார்த்தபோது மகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

இதனை தொடர்ந்து, சடங்கு சம்பிரதாயங்களுடன் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர், இது குறித்து தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிகிதாஸ்ரீயின் சடலத்தை கைப்பற்றி,

பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மின்சாரம் தாக்கி எப்படி சிறுமி உயிரிழந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், மேட்டுப்பாளையம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story