சிறுமி மாயம் - காவல்துறையினர் விசாரணை
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சிறுமி மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட தொட்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 24ம் தேதி, சிறுமி பெற்றோருடன் பாலக்கோடு அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
அப்போது உறவினர் வீட்டில் திடீரென அவரை காணவில்லை. பதறிய பெற்றோர், சிறுமியை அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாலக்கோடு காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் அளித்தனர். அதன்பேரில் பாலக்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.
Next Story