சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 23 ஆண்டு சிறை தண்டனை!
சிறை
திருப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை. வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் வளையபாளையம் பகுதியில் வசித்து வந்த 17 வயதுள்ள சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததற்காக பல்லடம் மாதப்பூரை சேர்ந்த மகேஸ்குமார் (23) என்பவர் மீது காமநாயக்கன்பாளையம் போலீசார் போக்சோ சட்டத்தில் கடந்த 20-9-2021 ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து மகேஷ் குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி மகேஷ் குமாருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டணையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் எதிரிக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர பணியாற்றிய போலீசாரை, போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா பாராட்டினர்.
Next Story